காஷ்மீரில் ராணுவ வீரரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குல்காம் மாவட்டத்தை சேர்ந்த அகமது மாலிக் என்பவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். விபத்து ஒன்றில் சிக்கிய இவரது மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அகமது மாலிக் விடுப்பில் இருந்தார். இறுதிச் சடங்கு முடிந்த சில மணி நேரத்தில் அவர் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கினார்.
முகமூடி அணிந்த தீவிரவாதிகள் நடத்திய பேரத்திற்கு அகமது மாலிக் அடிபணியவில்லை. இதையடுத்து, அவரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள், உடலை சாலையோரம் வீசிச் சென்றனர். ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டது காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post