வேலூர் மத்திய சிறையில் முருகன், சாந்தன் மற்றும் நளினி ஆகியோரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி இதனைத் தெரிவித்தார்.
வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் மற்றும் நளினி ஆகிய இருவரும் உள்துறைச் செயலாளருக்கும், சாந்தன் தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும், தற்போது உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பையொட்டி, 161-வது விதியைப் பயன்படுத்தி தங்களை விடுதலை செய்ய வேண்டும் என நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் கூறினார். இதனிடையே, 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் நகல் நீதிமன்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது.அரசியல் சாசனம் 161ன் கீழ் விடுதலை செய்யும்படி மனு அளித்திருந்தார் பேரறிவாளன். இந்த மனு செல்லும் என்றும், மனுவை ஏற்று, தமிழக ஆளுநர் சுதந்திரமாக சட்டத்துக்கு உட்பட்டு முடிவெடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.