ராக்கெட் வேகத்தில் உயரும் பெட்ரோல், டீசல் விலை – வாகன ஓட்டிகள் அவதி

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 36 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.84.85 ஆகவும், டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.77.74 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் முறை நடைமுறைக்கு வந்ததிலிருந்து விலையேற்றம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்த நடைமுறை அமலுக்கு வந்தபோது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 68 ரூபாய் 02 காசுகள் என்றும், டீசல் விலை 57 ரூபாய் 41 காசுகள் என்றும் இருந்தது. அதன் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 36 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.84.85 ஆகவும், டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.77.74 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர் விலை ஏற்றத்தால், போக்குவரத்து கட்டணங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் காய்கறி விலை அதிகரிக்கலாம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version