மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதிக்குள் 2ஆம் ஆண்டு மாணவர்கள் கும்பலாக சுவர் ஏறிக்குதித்து, அங்கிருந்த முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்தததாக கூறப்படுகிறது. முதலாம் ஆண்டு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது அவர்களை அடித்து உதைத்ததாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் முதலாமாண்டு மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவ கல்லூரியில் செயல்பட்டு வரும் ராகிங் தடுப்பு குழுவினருடன், கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் ராகிங்கில் ஈடுபட்ட 2ஆம் ஆண்டு மாணவர்கள 20 பேரும் 6 மாதத்திற்கு கல்லூரியில் இருந்தும், விடுதியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுவதாக முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கல்லூரி முதல்வர் பரிந்துரை செய்துள்ளார். வரும் காலங்களில் யாரும் ராகிங்கில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post