ராணுவத்துக்கு பிரான்ஸ் நாட்டின் ரபேல் நிறுவனத்திடம் இருந்து போர் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டி வருகிறார். நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பேசிய அவர், இதுபற்றி குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ரபேல் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ராகுல்காந்தி வலியுறுத்தி வந்தார். அவரது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு என்று காங்கிரஸ் கட்சிக்கு தவறான தகவல் தரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ராகுல் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
Discussion about this post