ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் விதிகள் தெளிவாக உள்ளது – பிரான்ஸ் அதிபர் விளக்கம்

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரான்ஸ் நாட்டின் விதிகள் தெளிவாக உள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரான்ஸ் அதிபர் மேக்ரானிடம், ரபேல் ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்துப் பேசிய இம்மானுவேல் மேக்ரான், ரபேல் ஒப்பந்தம் இரண்டு அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் என்று கூறினார்.

இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி தெரிவித்த கருத்துகளை நினைவுபடுத்துவதாகவும், மேக்ரான் சுட்டிகாட்டியுனார். மேலும், ஒப்பந்தம் கையெழுத்தான போது, தாம் பொறுப்பில் இல்லை எனவும், ஆனால் பிரான்சிடம் உள்ள விதிகள் தெளிவாக உள்ளதாகவும் இம்மானுவேல் மேக்ரான் விளக்கம் அளித்தார்.

Exit mobile version