ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என நிதிமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக கடும் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேட்டி அளித்துள்ளார்.
ரஃபேல் விமான ஒப்பந்தங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை அடியோடு நிராகரித்த ஜேட்லி, ரஃபேல் விமானங்கள் கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து மத்திய தலைமை தணிக்கையாளர் ஆய்வறிக்கையில் தெரிய வரும் என்றார்.
இரண்டு நாடுகளின் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒரே குரலில் பேசியுள்ளது தற்செயலாக நிகழ்ந்தது என எப்படிக் கூற முடியும் என்று ஜேட்லி கேள்வி எழுப்பினார்.
ரஃபேல் ஒப்பந்தம் இரு நாட்டு அரசுகளுக்கு இடையே நேர்மையான முறையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்பதால், ஒரு போதும் அதனைக் கைவிடும் திட்டம் இல்லை என்றும் ஜேட்லி தெரிவித்துள்ளார்.