மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இளம் வீரர்களை தேட வேண்டிய நிலை ஏற்படும் என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் எச்சரித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 என்ற கணக்கில் இழந்தது. இந்தத் தொடரில் விராட் கோலி மட்டுமே அதிகபட்சமாக 593 ரன்கள் குவித்தார். ரகானே, புஜாரா உட்பட மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே தோல்விக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே. பிரசாத், வீரர்களுக்கு போதுமான அளவிற்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அப்படியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனில், உள்ளூர் மற்றும் இந்தியா ஏ அணிகளில் இருந்து இளம் வீரர்களை தேடவேண்டிய அவசியம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
Discussion about this post