அலகாபாத் வங்கி, யூகோ வங்கி மற்றும் யுனைடெட் வங்கி ஆகிய மேலும் மூன்று வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் ஆலோசனைப்படி, தொய்வான நிலையில் உள்ள வங்கிகளை தேர்வு செய்து அவற்றை, நல்ல நிலையில் செயல்பட்டு வரும் வங்கிகளுடன் இணைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் விஜயா மற்றும் தேனா வங்கிகள் இணைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இந்தநிலையில், அலகாபாத் வங்கி, யூகோ வங்கி மற்றும் யுனைடெட் வங்கி ஆகிய மேலும் 3 வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கியுடன் 5 வங்கிகள் இணைக்கப்பட்டது.
இதன்தொடர்ச்சியாக நஷ்டத்தில் இயங்கிய ஐ.டி.பி.ஐ வங்கியின் பெருமளவு பங்குகள் எல்.ஐ.சி நிறுவனத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பொதுத்துறை வங்கிகளில் சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனாக இருப்பதாக கூறப்படுகிறது.
Discussion about this post