முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு மேலும் 3 மாதம் கால அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம், அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, பல்வேறு கட்டங்களா விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது வரை, 105 பேரிடம் விசாரணை நடத்தியுள்ள ஆறுமுகசாமி ஆணையம், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், விசாரணை ஆணையத்திற்கு மாநில அரசு வழங்கிய காலக்கெடு வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனால், விசாரணை நடத்த மேலும் 3 மாத காலம், அரசிடம் அவகாசம் கேட்க ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதனை, ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதால், அதற்கான கோரிக்கை கடிதத்தை நீதிபதி ஆறுமுகாமி விசாரணை ஆணையம், இன்று தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக ஆறுமுகசாமி ஆணையத்திற்கு, தமிழக அரசு 2 முறை கால அவகாசம் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post