தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் டோக்கன் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. பதிவுத்துறை அலுவலகங்களில் பொதுமக்களின் கூட்டத்தை வரிசைப்படுத்தவும், ஒழுங்கற்ற முறையை தவிர்க்கவும் டோக்கன் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி ஆவணம் பதிவு செய்ய 30 நாட்களுக்கு முன்பு பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இதில், போலி தகவல்கள் மூலம் பதிவுக்கு டோக்கன் பெறுவதாக புகார் எழுந்தது. மேலும், ஒரு நாளில் முன்பதிவு செய்த டோக்கன்களும், அந்த நாளில் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களும் சரிபார்க்கப்பட்டபோது, 40 சதவீதம் மட்டுமே பதிவுகள் நடைபெற்றது தெரியவந்தது. இதனை தவிர்க்கும் வகையில், பதிவுத்துறை மென்பொருளில் மின்னணு கட்டணம் அல்லது முத்திரைத்தாள் எண்ணை பதிவு செய்த பிறகே டோக்கன் பெறும் வகையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய முறை நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது.
Discussion about this post