9 நாள் சரிவுக்கு பின்னர் ஏற்றம் கண்ட மும்பை பங்குசந்தை மீண்டும் சரிவடைந்ததால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்
சர்வதேச நிலவரங்களால் பங்கு சந்தை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. சென்செக்ஸ் தொடர்ந்து 9 நாட்கள் சரிவுடன் முடிவடைந்த நிலையில் செவ்வாய் கிழமை ஏற்றம் கண்டது. பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் குறைந்த விலைக்கு கிடைத்ததால் முதலீட்டாளர்கள் அதிக முதலீடு செய்தனர்.
ஏப்ரல் மாத மொத்த பணவீக்கமும் குறைந்து காணப்பட்டதும் பங்கு சந்தை உயர்வுக்கு காரணமாக இருந்தது. செவ்வாய்கிழமை முடிவில் மும்பை சென்செக்ஸ் 227 புள்ளிகள் உயர்ந்து 37 ஆயிரத்து 318 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்கு சந்தை நிஃப்டி 73 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 222 புள்ளிகளில் நிலை கொண்டது. இந்த நிலையில் புதன் கிழமை வர்த்தகம் தொடங்கியவுடன் அதிரடியாக 200 புள்ளிகள் உயர்ந்தது.
இந்த உயர்வு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. வர்த்தகம் முடியும் போது சென்செக்ஸ் முந்தைய நாளைக்காட்டிலும் 203 புள்ளிகள் சரிந்து 37 ஆயிரத்து 114 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குசந்தை 65 புள்ளிகள் குறைந்து 11 ஆயிரத்து 157 புள்ளிகளில் நிலைகொண்டது.
Discussion about this post