முதுமலையில் கும்கி பயிற்சி முடித்த 3 யானைகள்!

கேரள மாநிலம் முத்தங்கா சரணாலயத்தில் உள்ள வளர்ப்பு யானை சூரியன், பத்தினம்திட்டா முகாமை சேர்ந்த வளர்ப்பு யானை சுரேந்திரன், எர்ணாகுளம் கோடநாடு முகாமை சேர்ந்த யானை நீலகண்டன், ஆகிய 3 வளர்ப்பு யானைகளும் இனி மதம்பிடிக்கும் யானைகளை அடக்கியாளும்.

ஆம். இந்த வளர்ப்பு யானைகளுக்கு கடந்த ஜூன் மாதம் 15 ம் தேதி தொடங்கிய கும்கி பயிற்சி 3 மாதமாக நடந்தது.

‘தொல்லை தரும் யானைகளை பிடிக்கும்போது அவற்றை சுற்றி வளைப்பது எப்படி?, பாதுகாப்பாக அழைத்து செல்லுவது எப்படி என கற்றுத் தரப்பட்டது. காலில் சங்கிலி கட்டப்பட்ட நிலையில் உள்ள யானைகளை சங்கிலியை மிதித்து நிறுத்துவது எப்படி ? காட்டு யானையை துரத்துவது எப்படி எனவும் கற்றுத் தரப்பட்டது.

பாரம் தூக்குவது, கயிறு கட்டி யானையை இழுத்தல்,யானை சவாரியின் போது பாகன்களின் கட்டளைகளுக்கு கீழ்படிதல் ஆகியவற்றையும் 3 யானைகள் கற்றுத் தேர்ந்துள்ளன.

பயிற்சி நிறைவு பெற்றதை தொடர்ந்து, நீலகண்டன், சுரேந்திரன் , சூரியன் ஆகிய 3 யானைகளும் சொந்த முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

Exit mobile version