இதுவரை 9 உயிரை காவு வாங்கியது நிஜ கொம்பன் – காட்டுக்குள் விரட்ட போடி வந்த 2 கும்கி யானைகள்

கும்கி படத்தில் கொம்பன் என்ற காட்டு யானை ஒரு கிராமத்தையே மிரட்டி வரும். பலரது உயிரையும் காவு வாங்கும். இந்நிலையில் அதே போன்ற ஒரு ஒற்றை காட்டு யானை தேனி மாவட்டம், போடி, தேவாரம் பகுதிகளில் சுற்றி வருகிறது.  

இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் இந்த யானை விளை நிலங்களையும், ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளையும் தாக்கி வருகிறது. இந்த யானை தாக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 

எனவே யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மக்னா யானையை வனப்பகுதிக்குள் விரட்ட விஜய், வாசிம் என்ற இரண்டு கும்கி யானைகள் போடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

Exit mobile version