இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நன்நாளில் நால்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். மாணவ மாணவியர் கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அந்த அறிக்கையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கட்டணமில்லா கல்வி, விலையில்லா பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள், மடிக் கணினிகள், கல்வி உபகரணப் பொருட்கள் , புதிய பாடத்திட்டங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் போன்ற விருதுகளை வழங்கி சிறப்பித்து வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிடும் ஆசிரியர் பெருமக்களின் சேவை மென்மேலும் சிறக்க வேண்டுமெனவும் அவர் வாழ்த்தியுள்ளார்.
Discussion about this post