திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை அமைச்சர்கள் எம்.ஆர்.விஜய பாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், கொள்ளிடத்தில் உடைந்த பகுதியில் தண்ணீர் அதிகம் வீணாகாமல் காவிரி வழியாக டெல்டா பகுதிகளுக்கு திருப்பிவிடும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். இப்பணியில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் மணல் மூட்டை அடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார். உடைந்த மதகுகள் அருகே தண்ணீரின் ஆழம் 13 அடி இருப்பதால், பணியில் சவாலாக இருப்பதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Discussion about this post