திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில், கடந்த 22ம் தேதி 9 மதகுகள் உடைந்தன. அதை தற்காலிகமாக சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அணையின் முதலாவது மதகு முதல் 17-வது மதகு வரை, 220 மீட்டர் தூரத்துக்கு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சீரமைப்பு பணிகளை அமைச்சர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்த பகுதியை, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். ஆறுகளில் மணல் அள்ளப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
Discussion about this post