தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 405 பயனாளிகளுக்கு 2 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இரு மொழிக்கொள்கையில் அதிமுக உறுதியான நிலைப்பாடு கொண்டுள்ளது என்றார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள இரு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றுவது உறுதி எனவும் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
Discussion about this post