மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த தனது செல்வாக்கை பயன்படுத்தி, தனது சகோதரர் கலாநிதி மாறன் நிறுவனத்திற்கு முறைகேடாக தொலைபேசி இணைப்பு வழங்கி பல கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாறன் சகோதரர்கள் இருவரையும் சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்திருந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்தநிலையில், நீதிபதி ஜெயசந்திரன் இன்று தீர்ப்பளித்தார். சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் மாறன் சகோதரர்களை சி.பி.ஐ நீதிமன்றம் விடுவித்தது செல்லாது என அவர் தெரிவித்தார். மேலும் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கை மீண்டும் பதிவு செய்து விசாரணை தொடங்கவும் சி.பி.ஐ நீதிமன்றத்திற்கு நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டார்.
Discussion about this post