சென்னை அண்ணாப் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் பருவ தேர்வு நடைபெற்றது. அதில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு பணத்தை பெற்றுக்கொண்டு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதாக பேராசிரியர்கள் சிலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலை கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா உள்ளிட்ட சிலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு தலைமை அலுவலகத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவகுமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது, தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் என மேலும் 30 பேரின் பெயர் விவரங்களை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அந்த 30 பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதால், வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது.
மறுமதிப்பீட்டு முறைகேட்டில் 30 பேருக்கு தொடர்பு
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: அண்ணாப் பல்கலைக்கழகம்மறுமதிப்பீட்டுமுறைகேடு
Related Content
பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது
By
Web Team
June 25, 2019
அண்ணாப் பல்கலை. மாணவர்களின் விடைத்தாள் மறு மதிப்பீட்டில் முறைகேடு
By
Web Team
August 2, 2018