கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி 2 வது நாளாக இன்று பார்வையிட்டார் . வயநாடு கோழிக்கோடு ஆகிய இடங்களை பார்வையிட்ட அவர் நிவாரண முகாம்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவிற்கு செய்யும் நிதி உதவிகள் இன்னும் விரிவுபடுத்த வேண்டும் எனக்கூறினார். பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். வீடுகளை புனரமைக்கவும், புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார். மத்திய அரசு அளித்த நிதி கேரளாவிற்கு போதாது எனவும் ராகுல் கூறியுள்ளார். கேரளாவிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்குமாறும் மத்திய அரசிற்கு ராகுல் கோரிக்கை விடுத்தார். இதனை தான் அரசியல் நோக்கில் பேசவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக பேசுவதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.
Discussion about this post