மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வால் 48 லட்சத்து 41 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 62 லட்சம் ஓய்வூதிய தாரர்களும் பயனடைய உள்ளனர். அகவிலைப்படி உயர்வால் ஆண்டுக்கு 6 ஆயிரத்து 112 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Discussion about this post