தேனி மாவட்டம் மஞ்சளாறு மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பொருந்தலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து முதல்போக சாகுபடிகாக வரும் 24-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை மொத்தம் 143 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பொருந்தலாறு அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.பொருந்தலாறு அணையில் இருந்து 24-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை தண்ணீர் திறக்க திறக்கப்படும். இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post