பொதுமக்கள் அரசுக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் அளிப்பதன் மூலமே, கொரோனா பாதிப்பு அடுத்தக் கட்டத்திற்கு செல்லாமல் தடுக்க முடியும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில், கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக, பத்திரிகையாளர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக, தமிழக சுகாதாரத்துறை வீடு வீடாக சென்று பரிசோதனைகளை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு, பொதுமக்கள் ஆதரவும், ஒத்துழைப்பும் அளிப்பதன் மூலமாக மட்டுமே கொரோனா பாதிப்பு அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் தடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post