போலியோ சொட்டு மருந்து வதந்திகளை நம்ப வேண்டாம்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

 

போலியோ சொட்டு மருந்து குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 122 கோடி ரூபாய் மதிப்பில் 72 இடங்களில் அவசர கால சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய திட்டத்தினால் சாலை விபத்தில் ஏற்படும் இறப்பு விகிதம் 8.3 சதவீதத்தில் இருந்து 5.4 சதவீதமாக குறைந்துள்ளதாக அவர் கூறினார்.

உத்திரபிரதேச மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்தில் வைரஸ் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மருந்தினை தயாரித்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக போலியோ சொட்டு மருந்து குறித்து தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் , போலியோ மருந்து குறித்து சமூக ஊடகங்களில் தவறான கருத்து பரவி வருகிறது என்றார். பொதுமக்கள் இதை நம்ப வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version