தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் பொதுக்கலந்தாய்வு மூலம் சேர்வதற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். முதல் சுற்றில் பங்கேற்கும், 10 ஆயிரம் மாணவர்களுக்கு, விருப்ப பாடத்தை தேர்வு செய்ய, மூன்று நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. மொத்தம், ஐந்து சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் சுற்றில், ‘கட் ஆப்’ மதிப்பெண், 190 வரை பெற்றுள்ள, 10 ஆயிரம் மாணவர்களுக்கு, இன்று விருப்ப பாடப்பதிவு நடைபெறுகிறது. இணைய வசதி இல்லாத மாணவர்களுக்காக தமிழகம் முழுவதும் 42 சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் கலந்தாய்வு இன்று முதல் அடுத்த மாதம் 19ம் தேதி வரை நடக்க உள்ளது. கலந்தாய்வுக்கான கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post