இந்தியாவின் முன்னணி பொறியாளர் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளையொட்டி, அவரது படத்தை டூடுளாக வைத்து கூகுள் நிறுவனம் கவுரவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி பொறியாளரான எம்.விஸ்வேஸ்வரய்யா, கடந்த 1860ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். சுதந்திர இந்தியாவின் எதிர்காலத்திற்காக வியக்க வைக்கும் கட்டுமானப் பணிகளை ஏற்படுத்தி மாபெரும் சாதனை படைத்தவர். அவரின் சேவையை பாராட்டி, மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. இந்தநிலையில், இவரின் 158வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மிக முக்கிய தலைவர்களின் பிறந்தநாளை டூடுளாக வைத்து கவுரவிக்கும் கூகுள் நிறுவனம், விஸ்வேஸ்வரய்யாவின் படத்தை இன்று டூடுளாக வைத்து சிறப்பித்துள்ளது.
Discussion about this post