மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாகர்கோவில் அருகே தேரூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் தூய்மையில் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்த பின்பு 4 ஆண்டுகளில் 8 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிலை கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழக அரசு ஈவு இரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
Discussion about this post