பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் ஆகியோரது ஜாமீன் மனு – தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நிர்மலாதேவிக்கு உடந்தையாக இருந்த உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சாத்தூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றங்களில் ஜாமீன் கோரி, நிர்மலா தேவி தாக்கல் செய்த 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஆராய்ச்சி மாணவர் முருகன் தாக்கல் செய்த மனுவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையால், கடந்த ஜூலை மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதி இளந்திரையன், அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கீழமை நீதிமன்றம், வழக்கினை தினந்தோறும் விசாரித்து விரைவாக முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Exit mobile version