ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து விவாதிக்க முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் 7 பேரையும் விடுவிக்க முடிவு செய்யப்பட்டு, ஆளுநருக்கு பரிந்துரை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை அனுப்ப உள்ளதாக தெரிவித்தார். மேலும் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவிற்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.