ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கினால் பெட்ரோல் டீசல் விலை கணிசமாக குறையும். ஆனால் இதற்கு அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டு வருவது ஊரறிந்த விசயம். இந்த விவகாரம் குறித்து ஈரான் அமைச்சர் அப்பாஸ் அகமதுவிடம் ஏ.என்.ஐ. செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு ஈரான் அமைச்சர் அளித்த பதில் , ” இந்த பிராந்தியத்தில் ஈரான் – இந்தியா உறவு என்பது அவசியமான ஒன்று. நாங்கள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வழியை தேடிக் கொண்டிருக்கிறோம்.
அமெரிக்கா இந்த பிராந்தியத்திற்கு ஒரு அந்நிய நாடு. ஆனால் நாம் அந்நியர் இல்லை. நான் இணைந்து பணியாற்ற வேண்டும். நட்பை வளர்க்க வேண்டும்.” இவ்வாறு ஈரான் அமைச்சர் காட்டமாக பதில் அளித்தார்.