பெட்ரோல் மீதான கலால் வரி குறைக்கப்படுமா? மத்திய அரசு பதில்!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை தொடர்ந்து,கலால் வரியைக் குறைக்க வாய்ப்பு இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் பெட்ரோலிய பொருட்கள் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகான வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கலால் வரியை மத்திய அரசு குறைத்தால், பெட்ரோலிய பொருட்களின் விலை குறையும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கலால் வரியைக் குறைக்க வாய்ப்பு இல்லை என மத்திய அரசு கைவிரித்துள்ளது. அவ்வாறு குறைத்தால் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்றும், நிதி வளர்ச்சியில் இலக்கை எட்ட முடியாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்துள்ளதே பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Exit mobile version