விண்ணைத்தொடும் அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல் , டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டிருக்கிறது.அத்தியவாசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து 85 ரூபாய் 31 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 6 காசுகள் அதிகரித்து 78 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களுடன் ஒப்பிடுகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரையிலும், டீசல் விலை 1 ரூபாய் 71 காசுகள் வரையிலும் அதிகரித்துள்ளது.
பெட்ரோல்-டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.