பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டி இருப்பதால், வாகன ஓட்டிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்த்தப்பட்டு வருவதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையும் இதனால் உயர்ந்து வருகிறது. இந்தநிலையில், பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் 85 ரூபாய் 87 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலை 10 காசுகள் அதிகரித்து, 78 ரூபாய் 20 காசுகளுக்கு விற்கப்படுகிறது. தொடர் விலையேற்றத்தால் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள், பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.