பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலைகள் நாள்தோறும் உயர்த்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசு கடந்த வாரம் லிட்டருக்கு இரண்டரை ரூபாய் குறைத்தது.
5 மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு விலை குறைப்பு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்தநிலையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் உயர்த்தி வருகின்றன. அதன்படி, பெட்ரோலிய பொருட்களின் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து 85 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 31 காசுகள் உயர்ந்து 78 ரூபாய் 35 காசுகளுக்கு விற்பனை ஆகிறது.
பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.