அமெரிக்க டாலருக்கு நிகரன இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணத அளவு குறைந்துள்ளதால், இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. இதனால் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்தது.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியுடன், பிரதமர் மோடி அவரசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜேட்லி, கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 86 டாலராக உயர்ந்துள்ளதாகவும், இதனால் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்ததாகவும் கூறினார்.
எனவே பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை 2 ரூபாய் 50 காசுகளாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். பெட்ரோல் டீசல் விலையை மாநில அரசுகளும் குறைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
அவ்வாறு விலையை குறைத்தால் லிட்டருக்கு 5 ரூபாய் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.