கரூர் மாவட்டம் பாப்பையம்பாடி, முத்தம்பட்டி, பூலாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் தம்பிதுரையும், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த அதிமுக தலைமை அனுமதித்தால், அதற்கு தயாராக இருப்பதாக கூறினார். பெட்ரோலிய பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இதை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வலியுறுத்தி இருப்பதாக குறிப்பிட்டார். எச். ராஜா கைது விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் என்று தம்பிதுரை தெரிவித்தார்.