திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று? – பொதுமக்கள் கேள்வி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில், விலை குறைப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்த வாக்குறுதி என்னவாயிற்று என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது.

சென்னையில் பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 98 ரூபாய் 65 காசுகளுக்கும், டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 92 ரூபாய் 83 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ((FULL CARD OUT))

தேர்தல் அறிக்கையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என திமுக அறிவித்திருந்தது. இந்த நிலையில், ஆளுநர் உரையில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகாததால், மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பெட்ரோல் விலை ஒரிரு நாட்களில் 100 ரூபாயை எட்டும் எனக் கூறப்படும் நிலையில், தமிழக அரசு விலை குறைப்புக்கு நடவடிக்கை எடுக்காதது, பொதுமக்களின் தலையில் பெரும் சுமையாக சேர்ந்துள்ளது.

Exit mobile version