சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 82 ரூபாய் 24 காசுகளுக்கும், டீசல் விலை 75 ரூபாய் 19 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம், மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விலையேற்றம் மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களையும் ஏழை மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் ஒவ்வொரு குடும்பத்தின் நகர்வையும் நிதிச்சிக்கலுக்கு ஆளாக்கியுள்ள வரலாறு காணாத விலை உயர்வு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post