பெட்ரோல்,டீசல் விலை இன்று மீண்டும் உயர்வு

பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்,இன்று மீண்டும் பெட்ரோல் ,டீசல் விலை உயர்ந்துள்ளன.நாள்தோறும் பெட்ரோலியப் பொருட்கள் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்தவகையில், சென்னையில் பெட்ரோல் விலை 25 காசுகளும், டீசல் விலை 23 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல், 83 ரூபாய் 91 காசுகளுக்கும், டீசல் விலை 76 ரூபாய் 98 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version