பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வும், எதிர்கட்சிகளின் போராட்டமும்.

பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்துள்ள நிலையில், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்துள்ளது. இதை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி, மத்தியஅரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட இருபத்தி ஒன்று எதிர்கட்சிகள் ஒன்று திரண்டு நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஒரிசா மாநிலம் சாம்பல்பூரில் காங்கிரஸ் பிரமுகர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதே போல், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் எதிர்கட்சிகள் சாலை மறியல், கண்டன பேரணி என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய பாஜக அரசுக்கு எதிரான இந்த போராட்டம் வலுபெற்றுள்ள நிலையில், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட வாய்புள்ளதாக தெரிகிறது.

Exit mobile version