பெட்ரோல் விலையை குறைக்க முடியாது என திமுக அமைச்சர் கூறியது சரியா ?

ஆட்சியில் இல்லாத போது, பெட்ரோல் டீசல் விலையை குறைக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய ஸ்டாலின்,

தற்போது அவரது அமைச்சரே விலை குறைப்பு சாத்தியமில்லை என்று கூறுவதை கண்டு மவுனம் காப்பது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு மட்டும் தான் காரணம் அல்ல, என ஆட்சியில் இல்லாத போது ஸ்டாலின் கூறி வந்தார்.

அசாம் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசை போல் தமிழ்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டுமென அன்றைய காலக் கட்டத்தில் திமுக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தின.

மேலும், தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது.

இந்த நிலையில், ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் விலை குறைப்பு குறைத்து வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பெட்ரோல் விலை குறைப்பிற்கு சாத்தியமே இல்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுவதை கண்டும் மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆட்சியை பிடிப்பதற்காக வாக்குறுதிகளை அள்ளிவீசி விட்டு, தற்போது மவுனம் காப்பது திமுகவின் கபட நாடகத்தை காட்டுவதாக பொதுமக்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

Exit mobile version