புதுச்சேரி: ஆளுநர் – முதலமைச்சர் மோதல்

புதுச்சேரியில் ஆளுநர் – முதலமைச்சர் இடையேயான மோதல் மீண்டும் விஸ்வரூபமெடுக்கிறது.

காவலர் பணிக்கான வயது வரம்பை தளர்த்துமாறு அரசு முன்வைத்த கோரிக்கையை கிரண்பேடி நிராகரித்துள்ளார்.

புதுச்சேரி மாநில காவல்நிலையங்களில் காலியாக 309 காவலர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டது. பொதுப் பிரிவினருக்கான அதிகபட்ச வயது 22 எனவும், ஓ.பி.சி பிரிவினருக்கு 25 எனவும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 27 எனவும் அரசு நிர்ணயித்தது.

இந்நிலையில், பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பை 24-ஆக தளர்த்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கான அனுமதி பெறுவதற்காக அரசு சார்பில் ஆளுநர் கிரண்பேடிக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனால் கோப்புகளை கிரண்பேடி திருப்பி அனுப்பியுள்ளார். காவலர் பணியிடங்களுக்கான வயது வரம்பில் பழைய நிலையே நீடிக்க வேண்டும் என ஆளுநர் கிரண்பேடி அரசுக்கு பதில் அனுப்பியுள்ளதாக புதுச்சேரி தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version