தேனியில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக்கடைக்கான கட்டிடத்தை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆதி திராவிடர் நல குடியிருப்பில், நியாய விலைக்கடைக்கு புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது குறித்து பரிசீலனை செய்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மேம்பாட்டு நிதியில் இருந்து 9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி பணியை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர், நியாயவிலை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதேபோன்று, தேனி மாவட்டம் உப்பார்பட்டி கிராமத்தில் புதிதாக பள்ளி வகுப்பறைகளையும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்ட அவர், கண்காட்சியை பார்வையிட்டதோடு மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
Discussion about this post