பீகார் மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு, பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய விங் கமாண்டர் அபிநந்தனின் பெயரை குடும்பத்தினர் சூட்டியுள்ளனர். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் இந்திய போர் விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கிக்கொண்டார். பின்னர் அவர் நேற்று விடுவிக்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். சென்னையைச் சேர்ந்த அபிநந்தனின் வீரம் மற்றும் துணிச்சலுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் பீகார் மாநிலம் கயாவில் உள்ள ரபாவதி மருத்துவமனையில் அல்கா என்ற பெண் தனக்கு பிறந்த குழந்தைக்கு அபிநந்தனின் பெயரை சூட்டியுள்ளார். மேலும் தன் மகனை ஒரு வீரனாக வளர்க்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அப்பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post