பிபா விருதுக்கு லூகா மோட்ரிச் தேர்வு!

2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான பிபா விருதுக்கு கால்பந்து வீரர் லூகா மோட்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வழங்கி வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான சிறந்த வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 5 முறை பிபாவின் சிறந்த வீரர் விருது பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, முகமது சலா மற்றும் லூகா மோட்ரிச் ஆகிய மூவரும் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், ரொனால்டோ மற்றும் முகமது சலா ஆகியோரை பின்னுக்கு தள்ளிய லூகா மோட்ரிச், 2018-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் மோட்ரிச் சிறப்பாக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version