யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், பால் பொருள்கள் வர்த்தகத்தில் விரைவில் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள 3 ஆலைகளில் பால் பொருட்களின் உற்பத்தியை நடப்பு நிதி ஆண்டில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. பால், தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி போன்ற பொருள்களையும் விற்பனை செய்ய உள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற பால் நிறுவனங்களின் விலையை விட 2 ரூபாய் குறைவாக அளவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. பால் பொருட்கள் விற்பனை மூலம் நடப்பு நிதியாண்டில் இதன் வருவாய் 500 கோடி ரூபாயாக இருக்கும் எனவும், அடுத்த ஆண்டில் 1000 கோடி ரூபாயாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பால் பொருள்கள் வர்த்தக்கத்துறை தற்போது 3 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்டுள்ளது. எதிர்காலத்தில் வளமான வர்த்தக வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், இந்த துறையில் சந்தை மதிப்பு வரும் 2022ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் அதிகரிக்கும் என்று பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Discussion about this post