கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் ஜலந்தரை சேர்ந்த பிராங்கோ மூலக்கல் பேராயராக இருந்து வருகிறார்.
இவர் 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
பேராயர் மூலக்கல் மீது, தேவாலய நிர்வாகமும், அம்மாநில காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காததைத் தொடர்ந்து, கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேராயர் மூலக்கல் கேரள உயர் நீதிமன்றத்தில், முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக 19 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி பேராயர் மூலக்கலுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பினர்.
அதன்படி கொச்சியில் சிறப்பு விசாரணைக் குழு முன் பேராயர் மூலக்கல் ஆஜரானார். பேராயரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Discussion about this post