திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் பிராங்கோ முல்லக்கல் என்பவர் பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்தார்.
அதன் பேரில் ஜலந்தர் சென்ற திருவனந்தபுரம் போலீசார், பிஷப் பிராங்கோவிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டித்து, கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 18 ஆம் தேதி விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு பிராங்கோவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியது. விசாரணைக்கு ஆஜராகும்போது போலீஸ் தன்னை கைது செய்யாமல் இருக்க, முன் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பிஷப் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்ற நீதிபதி விசாரணையை 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.