சேலம் மெய்யனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக இருப்பவர் சதீஷ். இவர் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது ,தொடுவது என சில்மிசத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர் சிலர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் 3ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ஆசிரியர் சதீஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சதீஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளிக்குள் நுழைந்த சிலர் ஆசிரியர் சதீசை வெளியே இழுத்து வந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த சென்ற போலீசார், பொதுமக்களிடம் இருந்து சதீஷை மீட்டு காவல்நிலையம் அழைத்து சென்றனர். சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீசார், பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் சதீஷ் அவரை கைது செய்தனர்.
பாலியல் தொல்லை -ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
-
By Web Team

- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
- Tags: ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைதுசேலம்பாலியல் தொல்லை
Related Content
மஹரிஷி வித்யா மந்திர் விவகாரம்: 4 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்த விசாரணை
By
Web Team
June 10, 2021
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் நடந்த விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
By
Web Team
June 4, 2021
உயிருடன் ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழப்பு!
By
Web Team
October 16, 2020
6 மாதங்களாக சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் - 7 பேர் போக்சோவில் கைது!
By
Web Team
October 14, 2020
இறந்ததாக நினைத்து முதியவரை Freezer Boxல் நாள்முழுவதும் வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!
By
Web Team
October 14, 2020